தருமபுரி மாவட்டம் பாலக் கோடு அடுத்த கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருள் (32). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாஞ் சாலி நகர் பகுதியைச் சேர்ந்த மதி (24) என்பவருக்கும், கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தனது தாய் வீடான ராயக் கோட்டை பாஞ்சாலி நகருக்குச் சென்றிருந்த மதியை. அழைத்து வர கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி அருள் சென்றார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அருள், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனை தடுக்க வந்த மதியின் தங்கை உஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக ராயக் கோட்டை போலீஸார் அருளை கைது செய்தனர். இவ்வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்ற நீதிபதி நேற்றுதீர்ப்பு அளித்தார். அதில், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக 14ஆண்டு சிறை தண்டனை, உஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், தண்டனையை தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago