கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இதன்படி தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் தொடங்கியது.

முதல் நாளான நேற்று ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களின் நெற்றியில் பேராயர்கள் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த தவக்காலத்தின்போது பல்வேறு பக்தி வழிபாடுகள் நடைபெறும். ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைத் தவிர்த்தல், நோன்பு இருத்தல், அசைவ உணவு தவிர்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். சிலர் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவு சாப்பிடாமல் உபவாசம் கடைபிடிப்பார்கள். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சபைக்குச் சென்று வேண்டுதல் செய்வார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்