விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியரை கொன்ற இளைஞர் கைது மாமியாரையும் கொலை செய்ய முயன்றார்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியரை கொன்ற இளைஞர் கைது செய் யப்பட்டார்.

விழுப்புரம் ஊரல்கரை தெரு வைச் சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் ராஜகோபால் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார். அதே வீட்டில் சித்ரா என்பவரும் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வீட்டிலிருந்து இளைஞர் ஒருவர் கத்தியுடன் வெளியே தப்பிச் சென்றார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் டிஎஸ்பி நல்லசிவம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் நேரில் சென்றனர். அந்த வீட்டில் மயங்கி கிடந்த சித்ராவை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் சித்ரா வின் மருமகன் சோனுசர்மா (28) என்பவர் பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாமியார் சித்ராவை கொலைசெய்ய சென்றுள்ளதும் தெரிய வந்தது. இதை அறிந்த போலீஸார் சோனுசர்மாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலமுருகன் விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். சித்ரா விழுப்புரம் நகரில் பல்வேறு வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது சித்ராவுக்கும் பாலமுருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒன் றரை ஆண்டு முன்பு சித்ராவின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

இதையடுத்து பாலமுருகன் கோயிலில் வைத்து சித்ராவை திருமணம் செய்துள்ளார். இதுசித்ராவின் மருமகன் சோனுசர்மா விற்கு தெரியவந்தது. அவர் தனது மாமியார் சித்ராவிடம் பிரச்சினை செய்ததோடு பாலமுருகனுடன் குடும்பம் நடத்துவதை கைவிடும்படி கண்டித்து வந்துள்ளார். இருப் பினும் சித்ராவும் பாலமுருகனும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்பிரச்சி னையில் அவர் பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் மாமியார் சித்ராவையும் அவர் தாக்கியுள்ளார். சித்ரா உயிரு டன் இருப்பதை அறிந்த சோனுசர்மா அவரையும் எப்படி யாவது கொலை செய்து விட வேண்டும் என்று எண்ணியுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கத்தியுடன் சென்றுள்ளார்.

ஆனால் அங்குள்ள புறக்காவல் நிலைய போலீஸாரிடம் சோனுசர்மா சிக்கி கொண்டார். இதையடுத்து சோனுசர்மாவை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

வீட்டிலிருந்து இளைஞர் ஒருவர் கத்தியுடன் வெளியே தப்பிச் சென்றார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்