பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

By செய்திப்பிரிவு

முல்லை பெரியாற்றில் இருந்து ரூ.380 கோடி மதிப்பீட்டில் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட 83 கண்மாய்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கான அரசாணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி, பெரியகுளம், ஆண்டி பட்டி, கம்பம் தொகுதிகளில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற தமிழ்நாடு முழுவதும் 6.50 லட்சம் நபர்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 2,600 பேருக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கும் தருவாயில் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி வீரபாண்டிக்கு அருகில் சுமார் 550 ஏக்கரில் தொழிற்பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தொகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக கண்மாய்கள், குளம், குட்டைகளுக்குத் தண் ணீரைக் கொண்டு சேர்க்கும் திட்டம் இருந்து வருகிறது. இதற்காக யாருடைய நிலமும் பாதிப்பு அடையாதவாறு முல்லை பெரியாற்றில் இருந்து ரூ.380 கோடி மதிப்பீட்டில் 83 கண்மாய்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கான அரசாணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும், என்றார்.

ப.ரவீந்திரநாத் எம்.பி., எஸ்.டி.கே.ஜக்கையன் எம்எல்ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் க.ப்ரிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆ.லோகிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்