வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

வேலூரில் காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 30 பேருக்கு கரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியா ளர்கள், காவல் துறை, வருவாய் துறையைச் சேர்ந்தவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூர் காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த காவலர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காவலர் பயிற்சிப்பள்ளியைச் சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 30 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று போடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்