ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,879-ஆக உயர்ந்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,675-ஆக உயர்ந் துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 19,441 ஆக அதிகரித்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago