கரூர் மாவட்டம் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் மார்க்கெட் வியாபாரி பாஸ்கரன் (45). தொழில் நிமித்தமாக கோவை வந்த இவர், கரூர் நோக்கி நேற்று காலை திரும்பிக்கொண்டிருந்தார்.
அவிநாசிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சுங்கம் அருகே, இவரது இருசக்கர வாகனத்தின் மீது அவிநாசிபாளையத்திலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் தப்பிவிட்டார்.
அவிநாசிபாளையம் போலீஸார் சென்று, பாஸ்கரனின் சடலத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லாரியை பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago