வருவாய்த் துறையினரின் வேலைநிறுத்தம் திருப்பூர் மாவட்டத்தில்தேர்தல் பணி பாதிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இதர வருவாய்த் துறை அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்குகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களது பணியை வரன்முறை செய்யும் அதிகாரத்தை ஆட்சியர்களுக்கு வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்சி, பதிவறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உத்தரவாதம் செய்து உடன் தீர்வு காண வேண்டும், பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த பேராட்டம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பதால், தேர்தல் மற்றும் வருவாய்த் துறை அலுவலகத்தின் பிற பணிகள் பாதிக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்