திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக 2-வது தளத்தில் படுக்கைகள் கொண்ட பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை, ஆட்சியர் அலுவலகத்தில் வெறும் 20 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுதொடர்பாக ஊழியர்கள் சிலர் கூறும்போது, "கரோனா தடுப்பூசி ஏற்பாடு தொடர்பாக, மாநகராட்சி சுகாதாரத் துறை யாருக்கும் எந்தவித தகவலும் அளிக்கவில்லை. அதேபோல, பலரும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி இருப்பதால், கரோனா தடுப்பூசி போட தயங்குகின்றனர். இதுதொடர்பாக எந்தவித அறிவுறுத்தல்களும், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், நாள் முழுவதும் 20 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்" என்றனர்.
மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் கூறும்போது, "முதல் நாள் என்பதால், பலரும் தடுப்பூசி போடவில்லை. இன்றுமுதல் (பிப்.17) பலரும் ஊசி போடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago