அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க தமிழக அரசு வழங்கும் நிதியுதவியை பெற விரும்பும் திருவள்ளூர் மாவட்ட நூலாசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்தின்கீழ், பயன்பெற விரும்பும் திருவள்ளூர் மாவட்ட நூலாசிரியர்கள், 'உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 28 என்ற முகவரியில் வரும் 26 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அல்லது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago