பெண் கல்வியில் விருதுநகர் மாவட்டம் முன்னேற்றம் மத்திய அரசின் தொடர்பு அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

முன்னேற விளையும் மாவட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மத்திய அரசின் தொடர்பு அலுவலரும் பழங்குடியினர் நலத் துறை இணைச் செயலருமான ஆர்.ஜெயா தலைமை வகித்தார். ஆட்சியர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளான திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் கல்வி, விவசாயம், உட்கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்.ஜெயா கூறியதாவது: நாட்டில் 117 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட் டங்களாகக் கண்டறியப்பட்டுள் ளன. அங்கு விவசாயம், கல்வி, உட்கட்டமைப்பை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறியீடும் வழங்கப் பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் சிறப்பாகச் செயல்பட்டு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.3 கோடி ஊக்கத் தொகை பெற்றுள்ளது.

இங்கு பெண் கல்வியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

அதைத் தொடர்ந்து பட்டம்புதூரில் உள்ள அரசு பள்ளியில் மத்திய அரசின் நிதி உதவியோடு நடைபெறும் ஸ்மார்ட் வகுப்பறை, வெற்றிலையூரணியில் ஆடு வளர்க்கும் திட்டம் மற்றும் பண்ணைத் தோட்டம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்