மாசி திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கமாக பூச்சொரிதல் நடைபெற்றது. இதையடுத்து விழா நேற்று முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்குப் பூஜை செய்யப்பட்டது. சிம்ம வாகனத்தில் அம்மன் அமர்ந்திருக்கும் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடியேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்ட கப்படி நடைபெற உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி தசாவதாரம், மார்ச் 1-ம் தேதி கொடியிறக்கம் நடைபெறும். திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கியும், தீச்சட்டி, பால்குடம் எடுத்தும் வழிபடுவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்