கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள், தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை செவிலியர் கூட்டமைப்பினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாவட்டத் தலைவர் சந்தனமாரி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் அமலா, மாவட்டச் செயலர் அமுதா, பிரச்சாரச் செயலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூறுக்கும் மேற்பட்ட செலிவியர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago