திருவாரூர் அருகே நாரணமங்கலம், கூடூர் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 480 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டு, அதன்மூலம் 3.16 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 14 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு உரிய தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 65,912 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.546 கோடியே 20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் ஏதும் வராத வகையில் கண்காணிக்க, முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர்கள் கண்கா ணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் குறித்த புகார் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வட்டாட்சியர் நக்கீரன் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago