ஆண்டியப்பனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டும், தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளது நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப் பனூரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப் பட்டது. பின்னர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப் பட்டது. இங்கு, 30 படுக்கை வசதிகள் உள்ளன. தினசரி 100 முதல் 150 புறநோயாளி கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, 25-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, பூச்சிக்கடி, விபத்து முதலுதவி சிகிச்சை, காய்ச்சல், தாய்-சேய் நலம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள், இருதயம் தொடர்பான நோயாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனைகளும் அதற்கான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப் பட்ட காலத்தில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ சேவை தற்போது மருத்துவ சிகிச்சை முறையாக இல்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, கரோனா தொற்று காலத்தில் ஆண்டியப்பனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என அதே கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகும் ஆண்டியப்பனூர் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப் படும் மருந்து, மாத்திரைகள், சிரஞ்சிகள், குளுக்கோஸ் பாட்டில்கள், கர்ப்பிணி களுக்கு வழங்கப்படும் ஏராளமான சத்து மாத்திரைகள், மருத்துவமனை வளாகத்தில் குவியல், குவியலாக கொட்டப்பட்டும், தீ வைத்து கொளுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்ட நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆண்டியப்பனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவது இல்லை. நோய் கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், மருந்துகள் வழங்கப்படுவ தில்லை. விபத்து, பிரசவம் உள்ளிட்டவற் றுக்கு முதலுதவி சிகிச்சைக் கூட அளிப்பது கிடையாது. உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அல்லது வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர்களும் செவிலியர்களும் கூறுகின்றனர்.
இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்து, மாத்திரைகள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்காததால் காலாவதியாகி தற்போது மருத்துவமனை வளாகத்தில் குப்பைப் போல வீசப்பட்டுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து ஆண்டியப்பனூர் தலைமை மருத்துவரிடம் விளக்கம் கேட்க முயன்ற போது, அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர், திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்திலிடம் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக எந்த புகாரும் இதுவரை எனது கவனத்துக்கு வர வில்லை. உடனடியாக ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தப்படும். மருந்து, மாத்தி ரைகள் நோயாளிகளுக்கு வழங்காமல் வீசப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், மருந்தாளுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago