விழுப்புரம் மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலககூட்டரங்கில், சட்டமன்ற தொகுதி களில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க அனைத்து அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கி னார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 1,957 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவைகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் படும்.
துணை வாக்குச்சாவடி மையங் களையும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 2,368 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி, தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்படும் படிவங்கள் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். உடனே நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அண்ணாதுரை பதிலளித்தார். இக்கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago