செஞ்சி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்திடுக

By செய்திப்பிரிவு

செஞ்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்எல்ஏயும், திமுகவிவசாய அணி இணைச் செய லாளரான செந்தமிழ் செல்வன் நேற்று மாலை விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

செஞ்சி பகுதியில் தற்போது நெல் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் இட நெருக்கடியும், போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. சன்ன ரக நெல் ரூ. 1,300-க்கும், மோட்டா ரக நெல் ரூ. 850-க்கும் மிக குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே செஞ்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

அரசின் ஊக்கத்தொகையுடன் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்திட தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்