கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 217 மனுக்கள் பொதுமக்களிடம் நேரடியாக பெறப்பட்டன.முன்னதாக மாற்றுத்திறனாளிகளி டம் மாவட்ட ஆட்சியர், கோரிக்கைமனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைந்து முடித்திட அறிவுறுத் தினார்.
கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் எச்.எஸ்.காந்த், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூரில் குறைதீர் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 450 மனுக்கள் வரப்பெற்றன. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்10 பயனாளிகளுக்கு இலவச எம்பிராய்டரி தையல் இயந்தி ரங்கள், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்று, வேளாண்மை பொறியியல் துறை மூலம் 25 பயனாளிகளுக்கு தலா 1,500 மீன்குஞ்சுகள் மற்றும் மீன்தீவனம் உட்பட மொத்தம் ரூ. 6.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 217 மனுக்கள் நேரடியாக பெறப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago