இலவச மின் இணைப்பு பெற தவறிய விவசாயிகளுக்கு நேர்காணல்

By செய்திப்பிரிவு

இலவச மின் இணைப்பு பெற தவறிய விவசாயிகளுக்கு நேர்காணல் வருகிற 17-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக மின் வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணகிரி சுதாகரன், போச்சம்பள்ளி முத்துசாமி, நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் ஆகியோர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சாதாரண வரிசையில் பதிவு செய்யப்பட்ட விவசாய விண்ணப்பங்களில் தயார் நிலை பதிவு செய்யப் படாமல் சில விண்ணப்பங்கள் உள்ளன. எனவே, மேற்கண்ட விவசாய விண்ணப்பதாரர்கள் இதற்கு முன்பு எந்தவிதமான திட்டத்திலும் விவசாய மின் இணைப்பு பெறப்படாமல் இருந்தால் விண்ணப்பதாரர், நிலத்தின் தற்போதைய உரிமையாளர், சம்மத கடிதம் பெற்ற வாரிசுதாரர் ஆகியோர் நில உரிமைக்கான கிராம நிர் வாக அலுவலர் சான்றுடன் கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி மற்றும் நாமக்கல் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. தகுதி உடைய விண்ணப் பதாரர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்