கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மேலும் 6 குழந்தை தொழிலாளர் களை மீட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் வகையில், "புன்னகையைத் தேடி"எனும் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் போலீஸார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, குழந்தை தொழிலாளர் களை மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்புவனேஸ்வரி, தொழிலாளர் நலஅலுவலர் கருணாநிதி, குழந்தைபாதுகாப்பு அலகின் அலுவலர்மாரிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் கச்சிராயப்பாளையம் பகுதி யில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் வேலை செய்த சிறுவர்கள், பேருந்து நிலையங்களில் யாசகம் எடுக்கும் குழந்தைகள் என 6 பேரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago