காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், கீழச்செல்வனூர் அருகே பூலாங்குறிச்சியைச் சேர்ந்த கருப்பையா மகள் நம்புகலா (20). திருப்புல்லாணி அருகே தில்லையேந்தலைச் சேர்ந்த பிரவீன் (20). இருவரும் கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது ஏற்பட்ட காதலால்,10 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்தனர். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி வீட்டில் நம்புகலா தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 12-ம் தேதி இறந்தார். இதுகுறித்து கீழச்செல்வனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

நம்புகலாவின் உறவினர்கள், வரதட்சணைக் கொடுமையால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் டிஎஸ்பி வெள்ளைத் துரை, இன்ஸ்பெக்டர் சரவண பாண்டி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து நம்புகலாவின் உடலைப் பெற்றுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்