சிவகங்கையில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை நகராட்சியில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க 1974-ம் ஆண்டு இடைக்காட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக இடைக்காட்டூர் அருகே வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதேபோல், 10 ஆண்டு களுக்கு முன்பு ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சிவகங்கை நகராட்சியும் இணைக்கப்பட்டது. இந்த இரண்டு குடிநீர்த் திட்டங்கள் மூலம் ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் திடீரென காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோகலேஹால் தெரு விஜயகுமார் கூறியதாவது: சிவகங்கை ராம்நகர் பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக் கப்பட்டது. ஐந்து நாட்கள் கழித்து ஒரு வீட்டுக்கு 2 குடங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று கூறினார்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், காவிரி குடிநீர் 5 நாட்களாக வரவில்லை. தற்போது இடைக்காட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டமே கைகொடுத்து வருகிறது. தண்ணீர் பற்றாக் குறையால் 5 நாட்கள் இடைவெளியில் விநியோகிக்கிறோம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்