ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த மாதஹள்ளி எத்துக் கட்டி வனப்பகுதி அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பரவியுள்ள காய்ந்த புற்கள் நேற்று முன்தினம் மாலை தீப்பற்றி எரிந்தன. அருகில் உள்ள மரம், செடிகளுக்கும் தீ பரவிய நிலையில், ஆசனூர் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வனப்பகுதியில் தீ பரவியுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தாளவாடி வனப்பகுதியில் இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெப்பமும் நிலவுகிறது. பனிப்பொழிவால் சிறு புற்கள் கருகிவிடுவதால், அவை கோடை வெப்பம் காரணமாக பற்றி எரிய வாய்ப்புகள் உள்ளன. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago