தென்காசியில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை எஸ்பி திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

தென்காசியில் 100 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சுகுணாசிங் திறந்துவைத்தார்.

தென்காசி நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப் பட்டுள்ளன.

தென்காசி தொகுதி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இலஞ்சியில் இருந்து தென்காசி மேம்பாலம் வழியாக குத்துக்கல் வலசை வரை 50 கண்காணிப்பு கேமராக்களும், தென்காசி ரத வீதிகள், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக் களுக்கான கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சுகுணாசிங் திறந்து வைத்தார். கேமராக்களின் செயல்பாட்டை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் எஸ்பி பேசும்போது, ‘‘காவல்துறையினரின் மூன்றாவது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தென்காசி நகரில் குற்றச் சம்பவங்கள் பெரிதும் குறைக்கப்படும். மேலும் நடந்த குற்றச் செயல்களில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க இது பெரிதும் உதவியாக இருக்கும் ” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்