வறுமையில் வாழும் மக்களுக்கு, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில்வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் முத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கயம் ஒன்றிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பி.செல்லமுத்து தலைமை வகித்தார். பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவாக்கும் கோரிக்கையை விளக்கி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் வட்ட செயலாளர் ஆர்.திருவேங்கடசாமி ஆகியோர் பேசினர். தமிழக அரசு கிராமப்புற ஊராட்சிகளில் அமல்படுத்திவரும், ஊரக வேலை உறுதி திட்டத்தைப்போல பேரூராட்சிப் பகுதிகளுக்கும் வேலை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு உடனடியாக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. வெள்ளகோவில் விவசாயத் தொழிலாளர் சங்கம் பி.துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பழனியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago