காய்கறிகள் பதப்படுத்தும் மையத்தில் நபார்டு வங்கித் தலைவர் ஆய்வு

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகேஒசஹட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வேர்க் காய்கறிகள் முதன்மை பதப்படுத்தும் மையத்தில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (நபார்டு) வங்கித் தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் நபார்டு வங்கி உதவியுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் 9 முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒசஹட்டி கிராமத்தில் ரூ.7 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வேர்க் காய்கறிகள் முதன்மை பதப்படுத்தும் மையம், நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது’’ என்றார்.

தொடர்ந்து, நஞ்சநாடு தொழிற் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை கொள்முதல் செய்யும் வகையில், கோழிக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட பசுந்தேயிலை சேகரிப்பு நவீன மையத்தை அவர் திறந்து வைத்தார். இன்ட்கோசர்வ் முதன்மை செயலர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சுப்ரியாசாஹு, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்