நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி உதகையில் நேற்று நடைபெற்றது.
தோட்டக்கலைத் துறையின் மூலம் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட 68 உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், வேளாண் வணிகத் துறை அலுவலர்கள், தேயிலை வாரிய அலுவலர்கள் மற்றும் இயற்கை வேளாண் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று, இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்தும் இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து விளக்கினர். 4800 விவசாயிகளை உள்ளடக்கிய 48 கூட்டுப் பண்ணையத் திட்ட குழுக்கள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, விவசாய நிலங்களை ஆய்வு செய்து அங்ககச் சான்று பெறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 42 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அங்ககச் சான்று வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago