காக்களூர் ஆவின் பால் பண்ணையில் ரூ.75 லட்சம் மதிப்பில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம்

By செய்திப்பிரிவு

திருவள்ளுர் மாவட்டம், பால்வளத் துறை சார்பாக காக்களுர் ஆவின் பால் பண்ணையில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் அதிநவீன பாலகத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநர் ஆர்.நந்தகோபால், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

காக்களூர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது திறக்கப்பட்ட நவீன பாலகத்தில் பால் மற்றும் கோவா, நெய், மைசூர்பா, பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், தயிர் போன்ற பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆவின் பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கவிசந்திரன், காக்களுர் ஆவின் பால் பண்ணை பொதுமேலாளர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்