விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில் முன்களப் பணியாளர்களான காவல் துறையின ருக்கும் மாவட்ட வாரியாக தடுப்பூசி போடப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுகா தார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரு கிறது. அதன்படி நேற்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் போலீஸாருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தனிப்பிரிவு ஆய் வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரேவதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் அலுவலக ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

முதல் நாளான நேற்று 85 காவல் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 2,300 பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்