அதிமுக ஆட்சியில் பெண்கள் மீது பாலியல் வன்முறை அதிகரிப்பு திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது, என திமுக எம்பி கனிமொழி பேசினார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற மகளிர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தட்டான்குட்டை ஊராட்சியில் நடைபெற்ற அருந்ததியர் பிரிவு பெண்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:

தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர்ந்துள்ளது. விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவினர் கரோனா பாதிப்பால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்கள் கருமுட்டை விற்று குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். மகளிர் கேட்ட கல்விக்கடன் ஸ்டாலின் சொன்னபடி தள்ளுபடி செய்யப்படும்.

அதிமுக ஆட்சியில் இரு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. எனினும், இவர்களை நம்பி யாரும் தொழில் தொடங்க முன்வரவில்லை.

சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி தமிழக அரசு தருவதில்லை. திமுக ஆட்சியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது. பெண்களின் வருத்தமே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்பது தான், என்றார்.

முன்னதாக பள்ளிபாளையத் தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் நெசவாளர் சந்திப்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்றார்.

திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜே.கே.எஸ். மாணிக்கம் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்