ரேஷன் குறைதீர் முகாமில் 77 மனுக்கள் அளிப்பு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் நடைபெற்ற ரேஷன் குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து 77 மனுக் கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம், குன்னம் வட்டம் அந்தூர், ஆலத்தூர் வட்டம் புஜங்கராயநல்லூர் ஆகிய 4 கிராமங்களில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில், முகவரி மாற்றம் சம்பந்தமாக 6 மனுக்கள், புதிதாக பெயர் சேர்க்க 16 மனுக்கள், பெயர் நீக்க 26 மனுக்கள், செல்போன் எண் மாற்ற 13 மனுக்கள், இதர கோரிக்கைகள் தொடர்பாக 16 மனுக்கள் என மொத்தம் 77 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்