கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆறு கதவணையை ரூ.185.27 கோடியில் புனரமைக்கும் பணியை காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். ஆட்சியர் சு.மலர்விழி மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா ஆகியோர் பணிகள் நடைபெற உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டனர்.
கரூர் மாவட்டம் மாயனூரில் ரூ.254.45 கோடியில் கட்டப்பட்ட கதவணை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி திறக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 33,289 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 6 ஆண்டுகளில், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் 2018-ம் ஆண்டு ஆக.11-ம் தேதி முதல் ஆக.22-ம் தேதி வரை 10 நாட்க ளுக்கு மேல் தொடர்ச்சியாக சென்ற மிகப்பெரிய வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக கதவணை கட்டுமானத்தில் சிறிது சிறிதாக சேதாரம் ஏற்படத் தொடங்கியது.
இதனால், பொதுப்பணித் துறை யினரின் பல்வேறு கட்ட ஆய்வு களுக்கு பிறகு இந்த கதவணை யில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்து, கதவணையை பலப்படுத்தும் வகையிலான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்து, ரூ.185.27 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, மாயனூர் கதவணை புனரமைப்பு பணிகளை சென்னைத் தலைமைச் செயலகத் தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, புனரமைக்கப்பட உள்ள பகுதி களை நேற்று கரூர் ஆட்சியர் சு.மலர்விழி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், காவிரி ஆறு பாதுகாப்பு திருச்சி கோட்ட செயற்பொறியாளர் எ.கண்ணன், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், உதவி செயற்பொறியாளர் வெங்க டேசன், உதவிப் பொறியாளர்கள் தர், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago