அடுத்தடுத்த பாதிப்புகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய், சேயை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஜன.28-ம் தேதி 34 வயதுடைய பெண், தனது 2-வது பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்குக் கடுமையான தலை வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் பரி சோதனை செய்தனர். இதில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சிறுநீர் மற்றும் ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தார். 3-வது நாள் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தனர். இதில், அவ ருக்கு மூளைச்சவ்வின் அடியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, மூளையின் நடுபாகத்தை ரத்தக் கட்டிகள் அழுத்தியதும் தெரியவந்தது.

இதனால், அந்தப் பெண்ணுக்கு எந்த நேரத்திலும் உடலின் முக்கிய பாகங்கள் செயலிழந்து உயிரிழக்க நேரிடும் என்பதால் உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், அந்தப் பெண்ணின் கபாலத்தில் துளையிட்டு மூளைச் சவ்வில் உள்ள ரத்தக் கசிவை யும், ரத்தக்கட்டியையும் மூளை அறுவைச் சிகிச்சை நிபுணர் அகற் றினார். தொடர்ந்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின், ஸ்கேன் செய்து பார்த்ததில் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால், அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவ்வாறு அடுத்தடுத்த பாதிப்புகளுக்கும் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டனர். பின்னர், தாயும், சேயும் நலமுடன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறி யதாவது: பிரசவத்துக்காக அனு மதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்து பாதிப்புகள் இருப்பது தெரியவந்ததால், அனைத்து வித மான உயர் மருத்துவ சிகிச் சைகளும் அளிக்கப்பட்டன. மருத் துவக் குழுவினரின் தீவிர முயற்சி யினால் தாயும், சேயும் காப்பாற் றப்பட்டனர். இது மருத்துவக் குழுவினரின் சாதனையாகும்.

அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு, தாயையும், சேயை யும் காப்பாற்றிய மயக்கவியல் துறை மருத்துவர்கள் சாய்பிரபா, சுபாஷினி, கஸ்தூரி, அறிவரசன், மகப்பேறு துறை மருத்துவர்கள் அமுதா, ஐஸ்வர்யா, நரம்பியல் துறை அறுவை சி‌கி‌ச்சை நிபுண‌ர் ஸ்டாலின் ராஜ்குமார் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்