அறந்தாங்கி அருகே மதுபோதையில் மனைவியை எரித்துக் கொன்ற கணவர் கைது

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே சுனையக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(39). இவரது மனைவி அமிர்தவள்ளி(19). நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சேகருக்கும், அமிர்தவள்ளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அமிர்தவள்ளி மீது மண்ணெண்ணையை ஊற்றி சேகர் தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமிர்தவள்ளி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சேகரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்