வேலூர், காட்பாடி மின் வாரிய கோட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு வேண்டி காத்திருக்கும் விவசாயிகளுக்கான நேர்காணல் முகாம் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற வுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர்கள் நடராஜன் (வேலூர்), பரிமளா (காட்பாடி) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மற்றும் காட்பாடி கோட்டத்தில் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2003-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் இலவச விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் எவ்விதமான விவசாய திட்டத்திலும் மின் இணைப்பு பெறாமல் இருந் தால், அவர்களுக்கான நேர்காணல் முகாம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள், நிலத்தின் தற்போதைய உரிமை யாளர் அல்லது வாரிசுதாரர் ஆகியோர் நில உரிமைக்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று களுடன் முகாம் நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் இணைப்பை பெற்றுக்கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago