இதுதொடர்பாக ராயம்பாளை யம் கிராம மக்கள் கூறும்போது, "புதிய சாலைப் பணி தொடங்கி மூன்று மாதங்களாகின்றன. பணிகள் முடிவடையாததால் புழுதிக் காடாக மாறிவிட்டது. இதுதொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறை யிட்டும் நடவடிக்கை இல்லை. ஆகவே, பல்வேறு கட்சிகள் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டுள்ளோம்" என்றனர். இதையடுத்து பொதுமக்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பேரூராட்சி செயல் அலுவலர், ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளரிடம் பேசி வரும் 16-ம் தேதிக்குள் பணிகள் தொடங்கப்படும் என்றார். அதுவரை காலை, மாலை இரு நேரங்களிலும் சாலையில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் விடுவதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago