இதுகுறித்து தீபாலபட்டியைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறும்போது, "தென்னையை வளர்த்து, அது விளைச்சலுக்கு வருவதற்கே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முன்னர், ஈரியோபைடு எனும் நோய் தாக்கியது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் தென்னை விவசாயத்தை கைவிட்டனர். கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள், தடுப்பு மருந்துகளின்றி சிறு, குறு விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது. இந்த நோய் தாக்கம் தொடங்கிய காலத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு துறையினர், காலப்போக்கில் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டனர். எனவே, வெள்ளை ஈ நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago