குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்தவர் எஸ்.சுரேன் (எ) சுரேந்திரன் (32) என்பவரும், திருப்பூர் எஸ்.வி.காலனி நாவலர் நகர் முதல் வீதியைச் சேர்ந்த ஆர்.சதீஷ் (30) என்பவரும் கடந்த ஜனவரி 2-ம் தேதி எஸ்.வி.காலனி மலை கருப்புசாமி கோயில் அருகே மளிகை கடையில் கத்தியை காட்டி ரூ.20 ஆயிரம் பறித்து சென்ற வழக்கில், வடக்கு காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுரேந்திரன் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் 4, அனுப்பர்பாளையம் காவல் நிலையம், பெருமாநல்லூர் காவல் நிலையம், அவிநாசி காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு காவல் நிலையம் ஆகியவற்றில் தலா ஒரு வழக்கு, திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் 4 என 12 வழக்குகள் உள்ளன. சதீஷ் மீது, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில், மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்