சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சிமென்ட், இரும்பு கம்பி விலை உயர்வைகண்டித்து கட்டுமானத் தொழிற்சங்கங்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சென்னையில் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம், அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்அருகே, செங்கல்பட்டு மாவட்ட கட்டுமானப் பொறியாளர் சங்கம், கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்நல மத்திய ஐக்கிய சங்கம், செங்கல்பட்டு அரசுஒப்பந்ததாரர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களின்சார்பில் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் சிமென்ட், இரும்பு கம்பிமற்றும் செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் அகில இந்தியகட்டுநர் வல்லுநர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொறியாளர் சங்க தலைவர் ஜவஹர், அரசு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் சங்க தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய சங்க தலைவர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago