கள்ளக்குறிச்சி கேசவலு நகர்பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப். இவருக்கு ஏற்கெனவே திருமண மாகி முதல் மனைவியை பிரிந் துள்ளார். இந்நிலையில், நிஷா என்ற பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. முதல் மனைவி மூலம்ஷெரீப்புக்கு ஒரு மகளும், மகனும்உள்ளனர். மகள் பேகம் மாற்றுத் திறனாளி. இவர் சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கரோனா தொற்றுக் காரணமாக பேகம் சென்னையிலிருந்து கள்ளக் குறிச்சி கொண்டு வரப்பட்டார். நிஷா பராமரிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஷெரீப் வேலைக்காக பெங்களூரு சென்றுள்ளார்.
நிஷா தனது உறவினருடன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் குடும்பத்தில் உள்ளவர்க ளுக்கும், நிஷாவிற்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் மனமுடைந்த நிஷா, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இரு பிள்ளைகளையும், புடவையால் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்கவிட்டு, தானும் புடவையால் தூக்கிட்டுள்ளார்.
உறவினர்கள் மீட்டு கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைப்பரிசோதித்த மருத்துவர்கள் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நிஷாவைமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago