துரிஞ்சாபுரம் அருகே தயார் நிலையில் உள்ள அம்மா மினி கிளினிக்கைதிறக்காததை கண்டித்து தர்ணா

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மருத்துவாம்பாடி ஊராட்சியில் தயார் நிலையில் உள்ள அம்மா மினி கிளினிக் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறந்து வைக்க வேண்டும் என சுகாதாரத் துறையிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர்.

ஆனாலும் பலனில்லை, இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மருத்துவாம்பாடி ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “தயார் நிலையில் உள்ள அம்மா மினி கிளினிக்கை திறக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் திறக்கப்படவில்லை. இன்று (நேற்று) 8 ஊராட்சிகளில் மருத்துவமனை திறக்கப்பட்ட போதும், எங்கள் ஊராட்சியை மறந்து விட்டனர். அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டால் மருத்துவாம்பாடி ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன் பெறுவார் கள். அம்மா மினி கிளினிக்கை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வட்டாட்சியர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தி, அம்மா மினி கிளினிக்கை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்