நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலுசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்முதற்கட்டமாக ஜனவரி 16-ம் தேதி நடைபெற்றது. மருத்துவர்கள், செவிலியர்கள் 4,825 பேர் ‘கோவின்’ இணையத்தில் பதிவு செய்ததில்,4,217 பேருக்கும், போலீஸார் மற்றும் முன்களப்பணியாளர்கள் 3,676 பேர் பதிவு செய்ததில் 742 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நாளை (பிப்.13) மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெறுகிறது. இதற்காக 5,400 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் உதகை,குன்னூர், கூடலூர், கோத்தகிரி அரசு மருத்துவமனைகள் மற்றும் தங்காடு ஓரநள்ளி, கேத்தி, நெலாக்கோட்டை மற்றும் நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படும்.
மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 890 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கேரளாவில் பரவல் அதிகமாக உள்ளதால், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நாடுகாணி மற்றும் தாளூர் சோதனைச்சாவடிகளில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago