விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரியில் வேதியியல் துறை தேசிய கருத்தரங்கம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேதியியல் ஆய்வுத்துறையின் சார்பாக ‘அன்றாட வாழ்வில் வேதியியல் பகுப்பாய்வு மற்றும் பொருட்கள்’ என்றத் தலைப் பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி. பிருந்தா நோக்கவுரையாற்றினார். முனைவர் சி.ஸி. உத்ரா வாழ்த்துரை வழங்கினார்.

இத்தேசியக்கருத்தரங்கில் சிறப்புவிருந்தினராக தெலங்கானா மாநிலத் தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக வேதியியல் துறையின் பேராசிரியர் முரளிதரன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், அறிவியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை விளக்கினார்.

இத்தேசியக் கருத்தரங்கின் முதல் அமர்வில் ‘பொருட்கள் மற்றும் பகுப்பாய்வுக்கான வேதியியல்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் ‘விபத்துகளின்போது உயிரைக் காக்கும் அடிப்படை அறிவி யலின் உயர் ஆற்றல் பொருட்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார். அதில், வாகனங்களினுடைய காற்றுப்பைகளின் பயன்பாடுகள், காற்றுப்பைகளில் செயல்படும் இயங்கு நுட்பம், வான்வழி போக்குவரத்து விபத்துகளில் இருந்து தற்காத் துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இத்தேசியக்கருத்தரங்கில் பல் வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 15 பேர் கட்டுரை வழங்கியதோடு 302 பேர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வில் தெய் வானை அம்மாள் கல்லூரியின் வேதி யியல் துறையின் தலைவர் முனைவர் காசிலிங்கம் வரவேற்றார். வேதியியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சிவச்சிதம்பரம் நன்றி கூறி னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்