திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையில் சுற்றித்திரிந்த மனநோயாளிகளை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், 5 மன நோயாளிகள் மீட்கப்பட்டு, மன்னார்குடி காவல் சரக டிஎஸ்பி இளஞ்செழியன், ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலையில், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago