தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதம் உள்ள காவிரி டெல்டாவில் முழுமையும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தான பட்டியலில் சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,400 கோடியும், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளடக்கிய தஞ்சாவூர், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1,124 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்டாவுக்கு குறைவான கடன் வழங்கி, முதல்வரின் சொந்த மாவட்டத்துக்கு மட்டும் விவசாயிகளின் பெயரில் மிகப்பெரும் தொகையை கடனாக வழங்கி பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. எனவே, கடன் நிவாரணம் மற்றும் கடன் வழங்கியது குறித்தான கூட்டுறவு வங்கிகளின் உண்மை நிலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago