புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 9-ம் நாளாக நடந்த மறியல் போராட்டத்தில், வயிற்றில் ஈரத்துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலைவகித்தார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புறநூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று 9-வது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் அரசுஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஆண்கள் சட்டை அணியாமல் வயிற்றில் ஈரத்துணி கட்டி, பெண்கள் கருப்பு உடை அணிந்து, முக்காடுபோட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 112 பெண்கள் உட்பட 159 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சாரதா மறியல் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். போராட்டத்தின் போது, அரசு ஊழியர்கள் சங்கு ஊதி, மணியடித்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago