கிருஷ்ணகிரியில் கோட்டாட்சி யரை இடமாற்றம் செய்யக்கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் கற்பகவள்ளியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில பிரச்சார செயலாளர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தின் போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல்களில் குளறுபடியை ஏற்படுத்தும் வருவாய் கோட்டாட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago