கிருஷ்ணகிரி அருகே வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ராயக்கோட்டை சாலையில் உள்ள காமராஜர் நகரில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி, மாவட்ட பொது செயலாளர் அப்சல், நிர்வாகிகள் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் தளபதி ரகமத்துல்லா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அ.க.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago