காயல்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் ஹமீதிய்யா பெண்கள் தைக்கா மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அசாருதீன், துணைச் செயலாளர் சிக்கந்தர் மீரான், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில், கிளை பொருளாளர் சுலைமான் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் வசீம் ஐத்ரூஸ் வரவேற்றார்.
ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் செல்வி முகாமினை தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் அரசுமருத்துவமனை ரத்த வங்கிமருத்துவர் சசிகலா தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். முகாமில் 65 பேர் ரத்த தானம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago