சஸ்பெண்ட் செய்யப்பட்ட தீயணைப்பு அதிகாரியின் வீட்டில் 1 கிலோ தங்கம், 27 சொத்து ஆவணங்கள் சிக்கின

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் சங்கேந்தியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(61). இவர் திருச்சி, புதுக் கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங் களில் மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணியாற்றினார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 31.8.2018 அன்று தஞ்சாவூரில் பணியாற்றியபோது சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

இந்நிலையில், இவர் திருவாரூர் மாவட்டம் சங்கேந்தி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாகுளம், தமிழ்ப் பல்கலைக்கழக சிந்தாமணி குடியிருப்பு உள்ளிட்ட 5 இடங்களில் வீடுகளும், பல இடங்களில் காலி மனைகளும் வாங்கியிருந்ததாகவும், 12 வங்கி களில் கணக்குகளை வைத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் வழக்கு பதிவு செய்தார்.

தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக சிந்தாமணி குடியிருப்பில் ரவிச்சந்திரன் வசித்து வரும் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதேபோல, அம்மாகுளத்திலும், சங்கேந்தியிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து டிஎஸ்பி மணிகண்டன் நேற்று கூறியதாவது: இந்த சோதனை யின்போது 5 வீடுகளின் சொத்து ஆவணங்கள், 22 காலிமனைகளின் ஆவணங் கள், ஒரு கிலோ தங்கம், 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை சிக்கின. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு தங்கம், வெள்ளிப் பொருட்கள் முடக்கி வைக்கப்பட் டுள்ளன. அத்துடன் ரவிச்சந்திரன், அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்களின் பெயர்களில் உள்ள 12 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு, அதில் எவ்வளவு சேமிப்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE